எல்லாத்துக்கும் நன்றி தானா? கொஞ்சமாவது ரோஷப்படுங்கள் தனுஷ்?


sivalingam| Last Modified வியாழன், 8 ஜூன் 2017 (23:55 IST)
நேற்று வெளியான தனுஷின் 'விஐபி 2' டீசர் தனுஷ் ரசிகர்களால் வரவேற்கப்பட்டாலும் நடுநிலை ரசிகர்கள் இந்த டீசரை வறுத்து எடுத்துவிட்டனர்.


 


தனுஷ் ஏன் இந்த டீசரில் வசனமே பேசவில்லை, கஜோலை ஏன் காண்பிக்கவில்லை, என வரிசையாக கேள்விமேல் கேள்வி கேட்டனர். இந்த கேள்வி எல்லாத்துக்குமே நன்றி, தாங்க்ஸ், என்றே தனுஷ் தனது டுவிட்டரில் பதில் கூறி வந்தார். மேலும் அனிருத் இல்லாத விஐபி, பருப்பு இல்லாத சாம்பார் என்று ஒருவர் கிண்டலடிக்க அதற்கும் தனுஷ் நன்றி என்று பதில் கூறினார்

இதனால் பொங்கி எழுந்த நெட்டிஸன்கள் கொஞ்சமாவது ரோஷப்படுங்கள் தனுஷ், எல்லாத்துக்கும் தாங்க்ஸ் தானா? என்று கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் அடுத்து வரவுள்ள டிரைலரில் தனுஷின் வசனக்காட்சிகளையும் கஜோல் காட்சிகளையும் இணைக்கும்படி எடிட்டருக்கு உத்தரவிட்டுள்ளாராம் தனுஷ்


 


இதில் மேலும் படிக்கவும் :