Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹீரோ ஆசையில் புஷ்பா புருஷன்!!


Cauveri Manickam (Suga)| Last Modified புதன், 6 செப்டம்பர் 2017 (18:04 IST)
புஷ்பா புருஷனான காமெடி நடிகருக்கு, மறுபடியும் ஹீரோ ஆசை வந்துள்ளதாம்.

 

 
புஷ்பா புருஷனான பரோட்டா காமெடி நடிகருக்கு, ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பது பலநாள் ஆசை. அவருக்குப் போட்டியாகக் கருதப்பட்ட மணக்கும் காமெடி நடிகர் ஹீரோ ஆனபோது, தானும் ஹீரோ ஆகவேண்டும் என துடியாய் துடித்தார். 
 
ஆனால், மணக்கும் காமெடி நடிகரின் படங்கள் சரியாகப் போகாததால், தன்னுடைய ஆசையைத் தள்ளி வைத்தார். தற்போது மீண்டும் களமிறங்கியுள்ள புயல் நடிகர், தன் நடிப்பில் வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். 
 
அஜித்துக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் இப்போது புயல் நடிகருக்கு ஜோடியாக நடிப்பதால், புஷ்பா புருஷனுக்கு மறுபடியும் ஹீரோ ஆசை தலைதூக்கியுள்ளதாம். அதைப்போன்ற ஒரு காமெடிக் கதையை தனக்காகத் தயார் செய்யுமாறு சிலரிடம் கூறியுள்ளாராம்.


இதில் மேலும் படிக்கவும் :