Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தயாரிப்பாளர்களைத் தவிர்க்கும் நடிகை

cauveri manickam| Last Modified சனி, 17 ஜூன் 2017 (18:43 IST)
புதுப் படங்களில் நடிக்க ஆர்வம் இல்லாததால், தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களைத் தவிர்க்கிறாராம் குண்டான நடிகை.
‘மாடு இளைத்தாலும், அதன் கொம்பு இளைக்காது’ என்பார்கள். படத்துக்கான குண்டான நடிகையும், அந்த நிலையில்தான் இருக்கிறாராம். சமீபத்தில் வெளியான வரலாற்றுப் படம், இதுவரை இல்லாத அளவுக்கு பெயரையும், புகழையும் பெற்றுத் தந்திருக்கிறது நடிகைக்கு. ஆனால், அவருடைய உடல் எடை தான் தயாரிப்பாளர்களையும், இயக்குநர்களையும் கொஞ்சம் யோசிக்க வைக்கிறதாம்.

வரலாற்றுப் படத்தில், கிராஃபிக்ஸ் மூலம் எடை குறைத்தது போல் குறைத்துக் கொள்ளலாம் என சில தயாரிப்பாளர்கள் முன்வந்தாலும், நடிகை ஒத்துக் கொள்வதில்லையாம். பழையபடி உடலை மாற்றிய பிறகே புதுப் படங்களில் நடிக்க சபதம் ஏற்றுள்ளாராம். அதனால், ‘5 கோடி ரூபாய் சம்பளம். மிகப்பெரிய ஹீரோ’ என்று சொல்லி, தன்னைத் தேடிவரும் தயாரிப்பாளர்களையும் விரட்டி விடுகிறாராம். கல்யாணத்துக்காகத்தான் புதுப்படங்களைத் தவிர்க்கிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :