விஜய் படத்திற்கு மறைமுக ரெட்கார்டா? அதிர்ச்சியில் மெர்சல் படக்குழுவினர்


sivalingam| Last Modified செவ்வாய், 11 ஜூலை 2017 (07:02 IST)
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் 'மெர்சல்' படத்தின் படப்ப்பிடிப்பு விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறம் இந்த படத்தின் வியாபாரத்தையும் தயாரிப்பாளர் தரப்பு தொடங்கிவிட்டதாக கருதப்படுகிறது


 
 
இந்த நிலையில் 'மெர்சல்' படத்தின் வெளிநாட்டு உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு விநியோகிஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் தரப்பு தகவல் அளித்தபோது யாருமே வரவில்லையாம்
 
விஜய்யின் முந்தைய படமான 'பைரவா' படத்தால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்கு நஷ்ட ஈடு கொடுத்த பேச்சுவார்த்தைக்கு பின்னரே வெளிநாட்டு உரிமை குறித்து பேச முடியும் என்று மறைமுக ரெட் கார்ட் போட்டது போல் கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் 'மெர்சல்' படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :