‘ஏ’ படத்தால் ஏமாந்துபோன நடிகை...


Cauveri Manickam (Suga)| Last Updated: திங்கள், 9 அக்டோபர் 2017 (20:17 IST)
தன்னிடம் தெளிவாகச் சொல்லாமல் ‘ஏ’ படம் எடுத்துவிட்டால், இரண்டாவது பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் கொழுக் மொழுக் நடிகை.

 
 
‘ஏ’ ஜோக் சாமியார் பெயரில் சமீபத்தில் ஒரு படம் ரிலீஸானது. வெளிப்படையாக ‘ஏ’ வசனங்கள் பேசிய இந்தப் படத்தைப் பலர் திட்டித் தீர்த்தாலும், கலெக்‌ஷனுக்கு குறைவில்லை என்கிறார் தயாரிப்பாளர். எனவே, சூட்டோடு சூடாக அடுத்த பாகத்தை ஆரம்பித்து விட்டனர்.
 
அதே தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என இரண்டாவது முறையாக அமைந்த கூட்டணியில், நடிகை மட்டும் வேறாம். முதல் பாகத்தில் நடித்த கொழுக் மொழுக் நடிகையைத்தான் கேட்டார்களாம். ஆனால், முதல் பாகத்தில் தன்னிடம் சொல்லாமல் ‘ஏ’ வசனங்களாக வைத்து அவமானப்படுத்தியதால், இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டாராம்.
 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :