Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நடிகை அனுபமா - நடிகர் சர்வந்த் இடையே காதல்?


Murugan| Last Modified சனி, 4 பிப்ரவரி 2017 (12:51 IST)
நடிகை அனுபமாவிற்கும், நடிகர் சர்வந்திற்கும் இடையே காதல் உருவாகியிருப்பதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

 
மலையாளத்தில் பிரேமம்  உள்ளிட்ட படங்களில் நடித்தவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழில் கொடி படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல், தமிழில் எங்கேயும் எப்போதும் படத்தில் அறிமுகமானவர் சர்வந்த். இவர் தற்போது தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
 
இவர்கள் இருவரும் சேர்ந்து சதாமனம் பவதி என்ற தெலுங்கு படத்தில் நடித்தனர். அந்த படம் வெற்றியடைந்துள்ளது.  இதற்கிடையில் அவர்கள் இருவரும் காதலில் விழுந்துவிட்டதாக கிசுகிசு எழுந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அனுபமா பதிவு செய்து வருகிறார். ஆனால், இந்த கிசுகிசு பற்றி அவர்கள் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை.


இதில் மேலும் படிக்கவும் :