‘இந்தப் படமாவது ஜெயிக்குமா?’ – எதிர்பார்ப்பில் நடிகர்


cauveri manickam| Last Modified வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (12:35 IST)
‘இந்தப் படமாவது ஜெயித்து தன்னைக் காப்பாற்ற வேண்டும்’ என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார் நடிகர்.

 

 
மிகப்பெரிய கலைக்குடும்பத்தில் பிறந்தவர் இந்த நடிகர். இவருடைய தாத்தா, ‘நடிகர் திலகம்’ என்ற பட்டத்தைப் பெற்றவர். இவருடைய அப்பா, பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசைப்படி நடிகரான இவருக்கு, நடிப்பு மட்டும் வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது இவருக்கு. மூக்கு மட்டும் பொடைப்பா இருந்தா போதுமா?

இவர் அறிமுகமான படத்தைத் தவிர, வேறெந்தப் படங்களும் சரியாகப் போகவில்லை. அதுவும், கடைசியாக வெளியான மூன்று படங்களுமே பயங்கர பிளாப். எனவே, அடுத்த மாதம் வெளியாகப் போகும் படத்தைத்தான் மலைபோல நம்பியிருக்கிறார் நடிகர். வரிசையான தோல்விகளால் இவரை வைத்து யாரும் படம் தயாரிக்க முன்வராததால், இவரே சொந்தமாக இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :