வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abi Mukatheesh
Last Updated : வெள்ளி, 15 ஏப்ரல் 2016 (16:39 IST)

இனி கூகுள் மேப்ஸ் மூலம் இந்தியாவில் ட்ராஃபிக் தகவல்களையும் பெறலாம்

கூகுள் மேப்ஸ் நூற்றுக்கணக்கான டிரைவர்களுக்காக ஒரு விலைமதிப்பற்ற கருவியாக மாறியுள்ளது. இனி இந்தியாவின் மிகவும் நெரிசல் மிகுந்த சாலைகளில் இருந்து டிரைவர்கள் சரியான நேரத்தில் மிகவும் நெரிசல்களை விட்டு விலகி செல்ல கூகுள் மேப்ஸ் உதவும்.


 
 
அமெரிகாவில் கடந்த 2015 மே மாதம் முதலே இந்த கூகுள் மேப்ஸ் நேரடி ட்ராஃபிக் எச்சரிக்கை பயன்பாட்டில் உள்ளது. இந்த சேவையின் விரிவாக்கம் தற்போது இந்தியாவுக்கும் வந்துள்ளது. இந்த சேவை இன்று முதல் இந்தியாவில் பயன்பாட்டிற்கு வருகிறது. கூகுள் மேப்ஸில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கத்தின் மூலம் பயனாளிகள் தங்களுக்கு ஏதுவான சிறந்த வழியை தெரிந்தெடுக்க உதவும்.
 
இந்த கூகுள் மேப்ஸ் கடும் போக்குவரத்து நெரிசல் மட்டுமல்லாமல் கட்டுமான பணி அல்லது விபத்து மூலம் ஏற்படும் கடுமையான நிலைமையை எச்சரிக்கும். இது குரல் எச்சரிக்கை மூலம் நிலைமையை விவரித்து ஓட்டுனருக்கு மாற்று வழி தெரிந்தெடுக்க உதவும்.