Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் வசதி அறிமுகம்!


Abimukatheesh| Last Updated: ஞாயிறு, 13 ஆகஸ்ட் 2017 (21:13 IST)
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் இனி வாட்ஸ்அப் மூலம் பண பரிமாற்றம் எளிதாக செய்துக்கொள்ளலாம். 

 

 
ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப்-ஐ கைப்பற்றிய பிறகு அதில் நிறைய வசதிகளை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்ய உள்ளது என்றும் அதை இந்தியாவில் சோதனை செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. 
 
அதன்படி தற்போது ஆதார் எண் மூலம் பண பரிமாற்றம் செய்யக்கூடிய UPI  PAYMENTS வசதியை இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப்பில் எளிதாக பண பரிமாற்றம் செய்துக்கொள்ளலாம். 
 
அதாவது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலமாக, இனி வரும் காலங்களில் அனைத்து பரிமாற்றங்களும் இனி ஆன்லைன்தான் என்ற நிலை உருவாகிவிட்டது. இந்த வசதி நடைமுறைக்கு வந்தால் வாட்ஸ்அப் சாட்மூலமாகவே ஒரு வங்கி கணக்கிலிருந்து, மற்றொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாறிக்கொள்ளளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் டிஜிட்டல் திட்டத்தை பயன்படுத்திக்கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் மேலும் லாபம் ஈட்ட இம்முறையை கையாளுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :