வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya
Last Modified: சனி, 2 ஜூலை 2016 (12:17 IST)

புதிதாக வரவுள்ள விவோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்

இந்தியாவில், விவோ செல்போன் நிறுவனம் தங்களது புதிய ஸ்மார்ட்போன்களான விவோ எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 பிளஸ் ஆகியவற்றை வெளியிட திட்டமிட்டு உள்ளது.


 

சீன உற்பத்தியான விவோ ஸ்மார்ட்போன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவோ எக்ஸ் 6எஸ் , எக்ஸ் 6எஸ் பிளஸ் என பெயரிடப்பட்ட மொபைல் போன்களை வெளியிட்டன.

இதன் வெற்றியை தொடர்ந்து எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 பிளஸ் ஆகிய புது மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிட தயாராகிக்கொண்டு இருக்கிறது.

இதனிடையே மொபைல் போன் வெளிவரும் முன் அதனைப் பற்றிய சில தகவல்கள் வந்துள்ளன. விவோ எக்ஸ் 7 மற்றும் எக்ஸ் 7 பிளஸ் யுனிபாடி உலோக வடிவமைப்பு (Unibody Metal Design), 16 மெகா பிக்சல் முன் கேமரா (16 Megapixel Front Camera) அம்சங்கள் மற்றும் முன் கேமராவில் எல்இடி ப்ளாஷ் (LED Flash), கைரேகை ஸ்கேனர் (Fingerprint Scanner), 4 ஜிபி ரேம் (4GB RAM), 64 GB உள்ளடங்கிய சேமிப்பு (64GB Inbuilt Storage) பொதுவாக இரண்டிலும் சேர்க்கப் பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 7 இரட்டை சிம் (Dual SIM), 5.2 அங்குலத் திரை (5.2 Inches Display), 3000mAh பேட்டரி (3000mAh Battery) கொண்ட இந்த மொபைல்கள் 151 கிராம் எடை பெற்றிருக்கும் எனவும், விவோ எக்ஸ் 7 பிளஸ் 5.7 அங்குலத் திரை (5.7 Inches Display), 4000mAh பேட்டரி (4000mAh Battery) அம்சங்களுடன், 183 கிராம் எடை பெற்றிருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இதன் விலை சுமார் 25,000 இருக்க வாய்ப்பு உள்ளதாகவும், கோல்ட் (Gold) மற்றும் ரோஸ் கோல்ட் (Rose Gold) ஆகிய இரு நிறங்களில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.