வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Caston / Tamilarasu
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2015 (13:50 IST)

‘கணக்கு மணக்கு ஆமணக்கு’ கணித சமன்பாட்டை தீர்க்கும் செயலி

ஸ்மார்ட் போன்களின் வருகையால், மனிதன் பல்வேறு அற்புதங்களை கண்டு வருகிறான். தன் விரல் நுனியில் உலகின் அனைத்து விசயங்களையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே செய்து முடிக்க இந்த ஸ்மார்ட் போன்கள் பெரிதும் உதவுகின்றன. தினமும் புதிது புதிதான பயன்பாடுகளும், அவற்றை பயன்படுத்த வித்தியாசமான செயலிகளும் வந்து கொண்டே இருக்கின்றன.


 
 
இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தங்களின் பெரும்பான்மையான நேரத்தை அவர்கள் ஸ்மார்ட் போன்களுடன் செலவளிக்கின்றனர். இவர்களை தங்கள் பக்கம் இழுக்க பல்வேறு செயலிகள் உலா வருகின்றன, அந்த வகையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை கவரும் வகையில் வெளிவந்துள்ள செயலி தான் போட்டோ மேத்(PhotoMath app) செயலி.
 

 
போட்டோ மேத்(PhotoMath app) செயலியின் பயன்பாடு:
இந்த போட்டோ மேத் செயலியின் மூலம் உங்களால் தீர்க்க முடியாத கணித சமன்பாடுகளை கூட சில வினாடிகளில் விடை தெரிந்து விடலாம். மனித மூளைக்கு சிறிதும் வேலை தராமல் இந்த போட்டோ மேத் செயலி உங்கள் கணித சமன்பாடுகளுக்கு விடை தந்துவிடுகிறது. போட்டோ மேத் செயலி உலகின் ஒரு புத்திசாலிதனமான கால்குலேட்டர் ஆகும், இதன் கேமிர மூலம் ஏதாவது ஒரு கணித சமன்பாட்டை படம்பிடித்தால் அடுத்த வினாடியே அதன் விடையை தந்து விடுகிறது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள தொடர்பில் செல்லவும்