சுஸூகியின் ஏடிவி ரகத்தைச் சேர்ந்த 2 புதிய வாகனங்கள் இந்தியாவில் அறிமுகம்


Ashok| Last Modified புதன், 9 டிசம்பர் 2015 (21:40 IST)
சுஸூகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் இயங்கக் கூடிய ஏடிவி ரகத்தைச் சேர்ந்த  2 புதிய வாகனங்களை டில்லியில் சனிக்கிழமை அறிமுகம் செய்துள்ளது.

 
 
இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மஸயோஷி ஐடோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது: வேகமாக வளர்ந்து வரும் இந்திய வாகனச் சந்தையில், நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் இயங்கக் கூடிய ஏடிவி ரகத்தைச் சேர்ந்த 2 புதிய வாகனங்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கு "ஓஸர்க் 250' மற்றும் "குவாட்ஸ்போர்ட் இசட்400' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
விடுமுறைக் காலத்தில் பயன்படும்  "ஓஸர்க் 250' மாடல் ரூ.5.45 லட்சமாகவும், "குவாட்ஸ்போர்ட் இசட்400' மாடல் ரூ.8.5 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
 
முதற்கட்டமாக, இந்த வாகனங்கள், புது தில்லி, மும்பை, பெங்களூரு, புணே, கொல்கத்தா, ஜோத்பூர் மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள எங்களது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் விற்பனை செய்ய இருக்கிறோம்  என்று அவர் தெரிவித்துள்ளார் .


இதில் மேலும் படிக்கவும் :