Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஸ்மார்ட்போன் அதிகம் சூடாவதைத் தடுக்கும் வழிகள்


Abimukatheesh| Last Updated: சனி, 7 ஜனவரி 2017 (21:42 IST)
ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. இதை தவிர்க்க 7 வழிகள் உள்ளன. 

 

 
ஸ்மார்ட்போனில் அடிக்கடி சூடாகும் பிரச்னை பெரும்பாலும் எல்லோரும் சந்திக்க கூடிய பிரச்சனை. ஸ்மார்ட்போனை ஒரு மணி நேரம் தொரட்ந்து பயன்படுத்திய பிறகு தொட்டுப்பார்த்தால் கொதிக்கும். சில சமயம் நீண்ட நேரம் சார்ஜ் போட்டு வைப்பதால் கூட இந்த பிரச்சனை ஏற்படும்.
 
மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. இந்த அதிகமான வெப்பத்தை தாங்கும் வகையில்தான் மொபைல் பாகங்களும் வடிவமைக்கப்படுகின்றன என்றாலும் கூட, மொபைலின் வேகமும், செயல்பாடும் இதனால் குறைவதை உணரலாம். பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும்.
 
மொபைல் போனை பயன்படுத்தும்போது சற்று கவனத்துடன் பயன்படுத்தினால் இந்த பிரச்சனையை எளிதாக தடுக்கலாம்.
 
ஒரே நேரத்தில் பல செயலிகளை இயக்குவது போன்றவற்றால் போனின் செயல்பாடு அதிகமாக இருக்கும். இதனால் வெப்பம் அதிகமாகும். இந்த பெரும்பாலும் தவிர்க்க முடியாது என்பதால். இப்படி பல செயலிகளை ஒரே பயன்படுத்தும் நேரத்தை குறைக்கலாம்.
 
சார்ஜ் போடும் போது நாம் செய்யும் பேட்டரி ஃபுல் ஆன பிறகும் கூட, சார்ஜிங்கிலேயே விட்டுவிடுவது. இரவு முழுவதும் போனை சார்ஜ் செய்வதுதான். இதை தவிர்க்கவும்.
 
ஃப்ளிப் கவர் வாங்கி மாட்டுவது போனின் வெப்பம் குறையாமல் இருக்க ஒரு காரணமாய் அமைகிறது.
 
இதுபோன்ற விஷயங்களை கவனித்து உங்கள் மொபைல் போனை பயன்படுத்தி வந்தால், வெப்பம் அதிகரிக்காமல் இருக்கும், அதோரு மொபைல் போனின் ஆயுள் கூடும்.


இதில் மேலும் படிக்கவும் :