வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (22:33 IST)

ஒரு டிவியின் விலை ரூ.3.5 கோடி! அப்படி என்ன இருக்குது தெரியுமா?

ரூ.5000 முதல் சந்தையில் டிவி கிடைக்கும் நிலையில் ஒரு கோடி முதல் முன்றரை கோடி வரையிலான டிவி மாடல்களை சாம்சங் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது.

உலகின் முதல் எல்.இ.டி ஃபார் ஹோம்' என்ற ஸ்க்ரீனை கொண்ட இந்த டிவியை சாம்சங் நிறுவனம் முதலில் இந்தியாவில்தான் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவி வீட்டு உபயோகத்திற்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஸ்க்ரீனை கொண்டது ஆகும்

சினிமா தியேட்டரில் பார்க்கும் படத்தின் தரத்தை விட துல்லியமான வீடியோவை தரும் ஸ்க்ரீனை கொண்ட இந்த டிவி  மாட்யூலர் ஃபார்மேஷன் என்ற தொழில்நுட்பத்தை கொண்டது. இந்த டிவியின் திரையை மாற்றி மாற்றி வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் எளிதில் பொருத்தி கொள்ளலாம்

மேலும் இந்த டிவியில் ஹெச்.டி.ஆர். பிக்சர் ரிஃபைன்மென்ட் என்ற தொழில்நுட்பம் இருப்படதால் திரையில் தோன்றும் காட்சிகள் நேரில் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

110-இன்ச் FHD, 130-இன்ச் FHD, 220-இன்ச் UHD மற்றும் 260-இன்ச் UHD ஆகிய மாடல்களில் கிடைக்கும் இந்த டிவியின் ஸ்க்ரீன் 1,00,000-க்கும் அதிக மணி நேரங்கள் உழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது சுமார் 12 வருடங்கள் தொடர்ந்து செயல்படும் தன்மை கொண்டது. இந்த டிவியின் விலை மாடலை பொருத்து ரூ.1 கோடி முதல் ரூ.3.5 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் மிகப்பெரிய ஷோரூமில் இந்த டிவிக்கள் கிடைக்கும்