1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 6 ஜனவரி 2016 (12:13 IST)

சுருட்டி மடக்கி வைக்கும் டிவி: அறிமுகப்படுத்துகிறது எல்ஜி

அதே நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பேப்பரைப் போல சுருட்டி மடக்கி வைக்கும் டிவி யை எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.


 

 
அமெரிக்க நாட்டின் லாஸ் வேகாஸ் நகரில் உலக நுகர்வோர் மின்னணு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி  CES 2016 விரைவில் நடைபெறவுள்ளது.
 
இந்த வர்த்தக கண்காட்சியில், முன்னணி மின்னணு நிறுவனமான எல்ஜி புதிய வகை டிவி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது.
 
இந்த டிவி எல்ஈடி தொழில் நுட்பத்தின் அடுத்தகட்டமான ஓஎல்ஈடி டிஸ்பிளே வசதி கொண்டது. இந்த டிவி யை பேப்பரை சுருட்டுவது போல் சுருட்டிக் கொள்ளலாம்.
 
இது இரு புறமிருந்தும் பார்க்கும் வசதி கொண்டதாகவும் மெல்லியதாகவும், வசதிக்கேற்றாற் போல் மடித்துக் கொள்ளும் டிவியாகவும் இருக்கும் என்று எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதற்கு முன்னர் சாம்சங் நிறுவனம் இதே போல் மடித்துச் செல்லும் தொழில்நுட்பத்தில் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.