கிரிக்கெட் ஸ்டார்களின் கையெழுத்துகளுடன் களமிறங்கும் ஓப்போ!

<a class=OPPO F7" class="imgCont" height="417" src="//media.webdunia.com/_media/ta/img/article/2018-06/05/full/1528205103-8257.jpg" style="border: 1px solid #DDD; margin-right: 0px; float: none; z-index: 0;" title="" width="740" />
Last Updated: செவ்வாய், 5 ஜூன் 2018 (18:55 IST)
பிரபல கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்துடன் ஓப்போ மொபைல் புது முயற்சியில் களமிறங்கியுள்ளது.

 
கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்து பெற அனைத்து ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள். பூஸ்ட் முன்பு சச்சின் கையெழுத்திட்ட பொருட்களை விற்பனை செய்தது. சச்சின், கங்குலி ஆகியோர் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் விற்பனை செய்யப்பட்டது.
 
அந்த வரிசையில் தற்போது ஓப்போ நிறுவனம் களமிறங்கியுள்ளது. மொபைல் போனில் பிரபல கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்துடன் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓப்போ F7 கிரிக்கெட் லிமிட்டெட் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.
 
ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ரோகித் சர்மா உள்ளிட்ட பல பிரபல கிரிக்கெட் வீரர்களின் கையெழுத்துடன் விற்பனைக்கு வந்துள்ளது. இதுறித்து இந்திய பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக இயக்குநரான வில் யாங் கூறியதாவது:-
 
குழந்தைகள்தான் சமுதாயத்தின் முதுகெலும்பு. எனவே, அவர்களின் கனவையும் இலக்குகளையும் அடைய ஒரு சிறந்த வாய்ப்பு இது. குழந்தைகள் எந்த துறையில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து அதற்கான வளங்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம் என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :