செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (13:11 IST)

நோக்கியா ரிட்டர்ன்ஸ்: கதி கலங்கும் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள்!!

நோக்கியா நிறுவனம் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் மூலம் 2017-ல் மீண்டும் மறுபிரவேசம் செய்ய உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது.




 
 
நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்ககூடும்.
 
இந்நிலையில் நோக்கியா வெளியிடப்போகும் ஸ்மார்போன் பற்றிய அதிகாரப்பூர்வமில்லாத அறிவிப்புகள் சில...
 
# நோக்கியா டி1சி, சி9, இ1, நோக்கியா ஸ்வான், பி1 போன்ற ஐந்து மாடல் ஸ்மார்ட்போன் வெளியாகலாம்.
 
# நோக்கியா டி1சி: 5 - 5.5 அங்குல புல் எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 430 செயலி, 2ஜிபி / 3ஜிபி ரேம், மற்றும் 16 ஜிபி சேமிப்பு திறன் ஆகியவை கொண்டிருக்கும்.
 
# நோக்கியா சி9: 64-பிட் க்வாட்-கோர் ஸ்னாப்டிராகன் 820 செயலி, 21 எம்பி பின்பக்க கேமிரா, 8 எம்பி முன்பக்க கேமிரா கொண்டிருக்கலாம். 4ஜிபி ரேம், 32ஜிபி / 64ஜிபி / 128ஜிபி சேமிப்பு இருக்கக்கூடும்.
 
# நோக்கியா இ1: 2.3 ஜிகாஹெர்ட்ஸ் இண்டெல் ஆட்டம் ப்ராசஸர், புல்எச்டி 1080பி ரெசெல்யூஷன் மற்றும் 2ஜிபி ரேம், 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 32 ஜிபி சேமிப்பு திறன், 20 எம்பி பின்புற கேமிரா, 5 எம்பி முன்பக்க கேமிரா இருக்கலாம்.
 
# நோக்கியா ஸ்வான்: 5.3 அங்குல டிஸ்ப்ளே, ஸ்னாப்ட்ராகன் 810 அக்டாகோர் செயலி, 4ஜிபி ரேம், 128ஜிபி உள் சேமிப்பு திறன், எல்இடி ப்ளாஷ், 42எம்பி பின்புற கேமிரா இடம் பெறலாம்.
 
# நோக்கியா பி1: 5.3-அங்குல எச்டி ஸ்க்ரீன், ஸ்னாப்டிராகன் 820 செயலி, 3ஜிபி ரேம், 32 ஜிபி இண்டர்னெல் மெமரி, 22.6 எம்பி பின்பக்க கேமிரா ஆகியவை இடம்பெறலாம்.