வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Ashok
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (17:47 IST)

கீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்

கீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்தியாவில் முதன் முதலாக மோடோ எக்ஸ் ஃபோர்ஸ் (Moto X Force) செல்போனை மோட்டோரோலா நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்த செல்போன் விலை ரூ.49,999 என என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 


 
 
மேலும், 64 ஜிபி மெமரி கொண்ட எக்ஸ் ஃபோர்ஸ் செல்போன் ரூ.53,999 விலைக்கும் விற்கப்பட உள்ளது. இந்த செல்போன் கருப்பு, வெள்ளை, க்ரே ஆகிய நிறங்களில் சந்தைகளில் கிடைக்கும். 
 
வரும் 8 ந்தேதி முதல், மோடோ எக்ஸ் ஃபோர்ஸ் செல்பேசி சந்தைக்கு வர உள்ளது. மேலும், முன்னனி ஆன்லைன் நிறுவனங்களான அமேசான் பிளிப்கார்ட்ல் கிடைக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 
 
நாம் பயன்படுத்தும் செல்போன்கள் பெரும்பாலானவை கீழே விழுந்து உடைந்து போயிருப்பது தான் கண்டிருப்போம். இதனால், கவனமாக கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது.
 
மோடோரோலா வெளியிட்டுள்ள மோடோ எக்ஸ் ஃபோர்ஸ் செல்பேசி, கீழே விழுந்தாலும், உடையாத பாதுகாப்பான வன்பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
எக்ஸ் ஃபோர்ஸ் செல்போனின் சிறப்பு அம்சம்: ஆண்டிராய்டு 5.1.1 லாலிபாப் இயங்குதளம், செல்பேசியில் 2 டிபி வரையிலான எஸ்டி மெமரி கார்ட் ஆதரிக்கிறது.
 
3 ஜிபி ரேம், ஹெச்டி திரை, வயர்லஸ் சார்ஜர், 21 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் முகப்பு கேமரா, மற்றும் 4ஜி நெட்வொர்க்