பென்ஸ் நிறுவனத்தின் ஏஎம்ஜி ஜிடிஎஸ் என்ற புதிய கார் இந்தியாவில் அறிமுகம்


Ashok| Last Modified வியாழன், 26 நவம்பர் 2015 (20:18 IST)
சர்வதேச அளவில் சொகுசுக் கார் தயாரிப்பில் முன்னணியில் விளங்கும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் ஏஎம்ஜி ஜிடி-எஸ் என்ற புதிய வகை காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

 
உலக அளவில் சொகுசுக் கார் தயாரிப்பின் முன்னணி நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸ், தனது புதிய வகை ஏஎம்ஜி ஜிடி-எஸ் பென்ஸ் காரை  செவ்வாய்க்கிழமை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரோலண்ட் ஃபோல்ஜர் டெல்லியில் அறிமுகம் செய்துவைத்தார்.
 
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மகுடம் வைத்தாற் போல, உலக அளவில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இப்புதிய வகை கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
4-லிட்டர் பை-டர்போ என்ஜின், அதிநவீன பிரேக் லைட்டுகள், கலப்புமுறை பிரேக்கிங் சிஸ்டம்,எட்டு காற்றுப் பைகள் உள்ளிட்ட வசதிகள் "ஏஎம்ஜி ஜிடி-எஸ்' காரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த மாடல், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், இவ்வாண்டில் அறிமுகப்படுத்தும் 14வது புதிய தயாரிப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
டெல்லி சந்தையில் இந்த காரின் விற்பனை விலை ரூ2.40 கோடி ஆகும். இந்த ஆண்டு இறுதிக்குள் மெர்சிடிஸ்-பென்ஸின் 15வது புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று மெர்சிடிஸ்-பென்ஸ் இந்திய பிரிவின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ரோலண்ட் ஃபோல்ஜர் கூறியுள்ளார்


இதில் மேலும் படிக்கவும் :