வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 மார்ச் 2017 (22:47 IST)

நீங்கள் ஃபேஸ்புக்கில் பிரபலமா? அப்ப இதை படியுங்கள்

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இதுவரை லைக் மற்றும் ஷேர் பட்டன்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது டிஸ்லைக் பட்டனை ஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ளது.




 



இந்த ஆலோசனையை ஃபேஸ்புக் வெகுகாலமாக யோசித்து வந்தாலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதற்காக இதுநாள் வரை டிஸ்லைக் பட்டனை வழங்கவில்லை. ஆனால் தற்போது முதல்முறையாக ஃபேஸ்புக் 'மெஸன்ஜர்' ஆப்-இல் மட்டும் டிஸ்லைக் பட்டனை வழங்கவுள்ளதாகவும், இதற்கு பயனாளிகளிடம் இருந்து வரும் வரவேற்பை பொறுத்து இந்த டிஸ்லைக் ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிர்வாகிகள் கூறியபோது, ''நாங்கள் மெஸன்ஜரை பயன்படுத்துவதற்கு இனிமையாகவும் சந்தோஷமாகவும் இருக்க பல புதிய விஷயங்களை அறிமுகப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த புது அப்டேட்டும் அதைப் போன்ற ஒன்றுதான்.' என்று தெரிவித்துள்ளது. இந்த டிஸ்லைக் பட்டன் பிரபலங்களுக்கு தொல்லை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்