ரூ. 2.30 கோடிக்கு விற்பனை செய்யப்படும் கோப்ரா போன்!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 26 மே 2017 (16:03 IST)
ரூ. 2.30 கோடி விலையில் புதிய போன் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

 
 
#VertuSignatureCobra என்ற பெயரில் துருக்கி தொழிலதிபர் ஒருவர் இந்த போனை வடிவமைத்துள்ளார். சீனாவைச் சேர்ந்த அலிபாபா ஆன்லைன் இணையதளத்தில் மட்டுமே இது விற்பனை செய்யப்படும்.
 
சிக்னேச்சர் கோப்ரா போனை வாங்க முன் பணமாக ரூ.10000 செலுத்த வேண்டும். உலகம் முழுவதும் 8 இடங்களில் மட்டுமே ஆன்லைன் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.
 
இதன் சிறப்பம்சம், பாம்பு சுற்றிக்கொண்டது போல மரகத கற்கள் முன்புறமும், பின்புறமும் இணைத்து, வடிமைக்கப்பட்டுள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :