ஸ்மார்ட் போனைப் பாதுகாக்க சிறந்த பதினொன்று!!!


Sugapriya Prakash| Last Modified புதன், 16 நவம்பர் 2016 (17:28 IST)
மொபைல் என்பது வாழ்வின் முக்கியமான அம்சமாக நிலைபெற்று விட்டது. அதை கவனமாகப் பாதுகாப்பது அவசியமான ஒன்று.

 
 
# ஸ்மார்ட்போனை பாஸ்வெர்ட் போட்டு பாதுகாப்பாய் வையுங்கள். சிம் கார்டுக்கு பாஸ்வேர்ட் போடும் வசதி இருந்தால் அதையும் பயன்படுத்துங்கள். 
 
# பத்து தடவைக்கு மேல் தவறான பாஸ்வேர்ட் கொடுத்தால் போனில் இருக்கும் தகவல்கள் எல்லாம் அழிந்து போகுமாறு ‘செட்’ செய்யுங்கள். 
 
# மொபைல் போனில் ஒரு நல்ல ஆன்டி வைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். அதில் ‘ஆன்டி தெஃப்ட்’ அதாவது ‘திருட்டு தடுப்பு’ அம்சங்களும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 
 
# போனுக்கு வருகின்ற செயலி அப்டேட்களை தவறாமல் நிறுவுங்கள். இன்றைக்கு இருக்கக் கூடிய மால்வேர் பாதிப்பிலிருந்து 77 சதவீதம் தப்பிக்க எளிய வழி லேட்டஸ்ட் செயலியை நிறுவுவது தான். 
 
# அப்ளிகேஷன்களை நிறுவும் போது அவற்றை பிளேஸ்டோர், பிளாக்பரி வேர்ல்ட், ஐட்யூன்ஸ் போன்ற அங்கீகாரம் பெற்ற இடங்களிலிருந்து மட்டுமே நிறுவுங்கள். 
 
# பொது வைஃபை தளங்களில் மொபைலை இணைத்துக் கொள்ளாதீர்கள். அதுவும் தானாகவே வைஃபையில் இணைந்து கொள்ளும் ஆப்ஷனை வைத்திருக்காதீர்கள். 
 
# ‘ஆப்ஸ்’களை தாமாக நிறுவும் அனைத்து முறைகளையும் தடை செய்து விடுங்கள். 
 
# போனில் இருக்கும் தகவல்களை அடிக்கடி ‘பேக்கப்’ எடுத்துக் கொள்ளுங்கள். தகவல்கள் தொலைந்து போகாமல் இருக்கும். 
 
# மொபைலின் ஐ.எம்.ஈ.ஐ.எண்ணை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். 
 
# மொபைலில் ரகசியத் தகவல்களை ‘என்கிரிப்ட்’ செய்து வைத்துக்கொள்ளுங்கள். 
 
# மொபைல் மூலம் ஷாப்பிங் செய்ய விரும்பினால் அந்தந்த கடைகளுக்குரிய அதிகாரபூர்வ ஆப்ஸ் மூலமாகச் செய்யுங்கள். பிரவுசர் மூலமாகச் செய்வதைத் தவிருங்கள். 


இதில் மேலும் படிக்கவும் :