Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஓவர் பில்டப் கொடுத்த ஆப்பிள்; பல்பு வாங்கிய ஐபோன் X (வீடியோ)

Iphone X
Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 நவம்பர் 2017 (13:03 IST)
ஸ்மார்ட்போனில் மிக முக்கிய சிறப்பம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐடி அன்லாக் முறை பாதுகாப்பானதல்ல என ஆய்வில் தெரியவந்துள்ளது.

 

 
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஐபோன் X மாடல் ஸ்மார்ட்போன் பல முக்கிய அம்சங்களுடன் வெளியாகியுள்ளது. அதில் ஃபேஸ் ஐடி அன்லாக் முறை மிக முக்கியமான ஒன்றாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஆப்பிள் நிறுவனம் அறிவித்தது போன்று பாதுகாப்பானது இல்லை என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வியட்நாமை சேர்ந்த பாதுகாப்பு நிறுவனமான காவ் 150 டாலர்கள் செலவில் முகமூடி ஒன்றை உருவாக்கி ஆப்பிள் ஃபேஸ் ஐடி பாதுகாப்பானது இல்லை என உறுதி செய்துள்ளனர். 3D பிரிண்டிங், மேக்கப் மற்றும் 2D படங்களை ஒன்றிணைத்து முகமூடி உருவாக்கப்பட்டது.
 
முகத்தில் உள்ள கன்னம் மற்றும் மூக்கு பிரேத்யேமாகவும் கச்சிதமாகவும் உருவாக்கப்பட்டதாக காவ் சைபர் செக்யூரிட்டி துணைத் தலைவர் கோ டுவான் தெரிவித்தார். இதன்மூலம் அவர்கள் ஐபோனை ஏமாற்றி அன்லாக் செய்துள்ளனர். மேலும் ஆப்பிளின் ஃபேஸ் ஐடி பாதுகாப்பானது இல்லை என்பதை தெளிவாக விளக்கும் வீடியோவை யூடியூபில் பதிவிட்டுள்ளனர்.
 
இந்த வீடியோ ஆப்பிளின் புதிய தொழில்நுட்பத்தின் பாதுகாப்பு தன்மைக்கு சவால் விடுத்துள்ளது.   
 

நன்றி: Bkav Corp


இதில் மேலும் படிக்கவும் :