Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

வாட்ஸ்-அப்பில் புதிய வசதி. இனி புகைப்படம், வீடியோவாகவும் ஸ்டெட்டஸ்.

செவ்வாய், 21 பிப்ரவரி 2017 (06:43 IST)

Widgets Magazine

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேவருகிறது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கின் கிளை நிறுவனமாக விளங்கும் வாட்ஸ் அப் நிறுவனம் தற்பொழுது புதிய வசதி ஒன்றை அதன் பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுவரை வாட்ஸ் அப்பின் ஸ்டேடஸ்ஸாக டெக்ஸ்டை மட்டுமே வைக்க முடிந்தது. இனி வாட்ஸ் அப்பின் ஸ்டேட்டஸாக புகைப்படங்கள் , ஜுப் மற்றும் வீடியோக்களை வைக்கும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஸ்டேட்டஸ்கள் 24 மணி நேரத்தில் தானாக மறையுமாறு செய்யலாம் . ஸ்டேட்டஸை குறிப்பிட்ட நபர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் அதனுடைய பிரைவசியில் மாற்றிக்கொள்ளவும் வசதி உண்டு.

இந்த புதிய வசதி முதல்கட்டமாக ஜரோப்பாவில் அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப், இந்த வசதிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவும் ஃபேஸ்புக்

வேலையில்லா பட்டதாரிகள் இனிமேல் வேலை வாய்ப்பு அலுவலகங்களுக்கோ, அல்லது வேலைவாய்ப்பு தரும் ...

news

மீண்டும் வருகிறது நோக்கியா 3310 போன்

முதன்முதலில் இந்தியாவில் மொபைல் போன் அறிமுகமானபோது அனைவரும் மொபைல் போன் என்று ...

news

மார்ச் 11 முதல் ஜெயா டிவி சேனல்கள் துண்டிக்கப்படும்: மாவிஸ் சாட்காம் அறிவிப்பு!

நேயர்களுக்கு அறிவிப்பு என்று மாவிஸ் சாட்காம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ் ...

news

பேஸ்புக்கில் இருந்தே வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!!

பேஸ்புக்கில் இருந்தே நேரடியாக வேலைக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை அமெரிக்கா மற்றும் கனடா ...

Widgets Magazine Widgets Magazine