கார்போன் வழங்கும் கோச்சடையான் ஸ்மார்ட்போன்

FILE

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படம் வெளிவருகிறது என்றாலே நாடு முழுவதும் கொண்டாட்டம்தான். லட்சக்கணக்கான ரசிகர்களும், திரைப்பட ஆர்வலர்களும் அவரது படத்தைப் பார்ப்பதற்கு ஆவலுடன் காத்திருப்பார்கள். மேலும் அவரது படத்தை முன்னிட்டு பல்வேறு வகையான வியாபாரங்கள் களைகட்டிவிடும்.

தற்போது, ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் ‘கோச்சடையான்’ படத்தை முன்னிட்டு வியாபாரங்கள் தொடங்கிவிட்டன. அதில் பிரபல போன் தயாரிப்பு நிறுவனமான கார்போன் நிறுவனமும் நுழைந்துள்ளது. இந்த நிறுவனம் போன் விற்பனையில் ஐந்தாவது இடத்திலும், உள்நாட்டு தயாரிப்புகளில் இரண்டாம் இடத்திலும் இருக்கிறது,

இது ஸ்மார்ட்போன் காலம் என்பதால் ஐந்து லட்சம் கோச்சடையான் சிறப்பு ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகள், சிறப்பு பதிப்பு போன்கள் என்று கார்போன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டு சிறப்பு போன்கள், மூன்று ஸ்மார்ட்போன்கள், ஒரு டேப்லட்டு என்று ஆறு புதிய மாடல்கள் வெளிவர உள்ளன.

Webdunia|
நடிகர் ரஜினிகாந்தின் புதிய படமான கோச்சடையான் வெளியீட்டை முன்னிட்டு கார்போன் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த போன்களில் கோச்சடையான் டிரைலர்கள், பாடல்கள், வசனங்கள், துணுக்குகள், படங்கள், திரைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். படத்தின் வெளியீட்டுத் தேதியை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்த போன்கள் வெளிவர உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :