இணை‌ய‌த்‌தி‌ல் தாயுமானவர் கோயில் வரலாறு

Webdunia| Last Modified திங்கள், 25 மே 2009 (13:04 IST)
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் வரலாறு, 3 மொழிகளில் இணைய தளத்தில் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.

வைர‌ங் சொ‌ல்யூஷ‌ன் எ‌ன்ற த‌னியா‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ன் தலைவரான ரா‌‌ம்மோக‌ன் ர‌ங்க‌ன் இ‌ந்த இணையதள‌த்தை உருவா‌க்‌கியு‌ள்ளா‌ர். இவ‌ர் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயி‌லி‌ன் ப‌க்தராவா‌ர்.

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் வரலாறு, புராணம், சிறப்பு அம்சங்கள், பூஜை விவரம், புகைப்படங்கள் போன்றவை தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று இணைய தளத்தில் வெளியிடப்ப‌ட்டு‌ள்ளது. தாயுமானவரா‌ல் இய‌ற்ற‌ப்ப‌ட்ட தேவாரமு‌ம் இ‌தி‌ல் இட‌ம்பெ‌ற்று‌ள்ளது.
தேரோ‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் கா‌ர்‌த்‌திகை ‌தீப‌ம் உ‌ள்‌ளி‌ட்ட கோயில் விழாக்களையு‌ம் இ‌ந்த இணையதள‌ம் மூலமாக நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ‌ணையதள‌த்‌தி‌ல் கோ‌யி‌லி‌‌ன் மு‌‌க்‌கிய அ‌ம்ச‌ங்க‌ள் அனை‌த்து‌ம் புகை‌ப்பட‌த் தொகு‌ப்பாக இட‌ம்பெ‌ற்று‌ள்ளது அனைவரையு‌ம் கவ‌ர்‌ந்து‌ள்ளது.

இ‌ந்த ‌விவர‌ங்க‌ள் அட‌ங்‌கிய இணையமான thiruchyrockfort.org என்ற இணைய தளத்தை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் பாலசுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.
கோயில் வரலாறு மும்மொழிகளில் இணைய தளத்தில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. இதனை‌த் தொட‌ர்‌ந்து தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் வரலாற்றை இணையதளத்தில் வெளியிடும் திட்டமும் உள்ளது எ‌ன்று இணையதள‌த்தை வடிவமைத்த ராம்மோகன் ரங்கன் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :