அனைத்து அம்சங்களுடன் குறைந்த விலை ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்

FILE

இதன் 4.7 அங்குல திரை ஐ.பி.எஸ். டிஸ்பிளே கொண்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லிபீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. இதனை 1.2 டூயல் கோர் ப்ராசஸர் இயக்குகிறது. இதன் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள கேமரா 8 மெகா பிக்ஸெல் திறனுடன் எல்.இ.டி. பிளாஷ் கொண்டுள்ளது.

முன்புறமாக வீடியோ அழைப்பிற்கென, 2 எம்பி திறனுடன் கேமரா தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வைஃபை, இ.டி.ஆர். இணைந்த புளுடூத், A2DP, மற்றும் எஃகு தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.

எப்.எம். ரேடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இதன் உள் நினைவகம் 4 ஜி.பி. இதில் பயனாளர் 2 ஜிபி வரை பயன்படுத்தலாம். இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். இதில் 2000 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது.

Webdunia|
சஹோலிக் (Saholic) இணைய விற்பனைத் தளத்தில் புதிய ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் அதிகபட்ச விலை ரூ.8,990/-


இதில் மேலும் படிக்கவும் :