வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இஸ்லாம்
Written By Sasikala

ரம்ஜான் மாதத்தில் 30 நாள் முக்கியத்துவம் வாய்ந்த நோன்பு

கலீமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து கடமைகளை வலியுறுத்துகிறது இஸ்லாம். மேலும் நோன்பு உங்களுக்கு கேடயமாக இருக்கிறது என்கிறது. உங்களுக்கு முன்னுள்ளவர்களுக்கு விதிக்கப்பட்டது போல், நோன்பு உங்களுக்கும் விதியாக்கப்பட்டுள்ளது என குர்ஆனில் இறைவன் கூறுகிறார்.

 
இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.  மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற  நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.
 
கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து  இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.
 
விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு  தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு  முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.
 
நோன்பு வைக்க இயலாதவர்கள் யார் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை. வயதானவர்கள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள்நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான  தொகையை தர்மமாக தரலாம்.
 
ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும்.