செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (10:41 IST)

ஐ.பி.எல்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஸ்டெய்ன் புறக்கணிப்பு

ஐ.பி.எல் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் ஸ்டெய்னுக்கு தற்போது வாய்ப்பு தர இயலாது என்று அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
 

 
வேகபந்து வீச்சில் உலக புகழ் பெற்றவர்களில் ஒருவரான ஸ்டெயின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றுள்ளார். எனினும் இந்த சீசனில் ஸ்டெய்ன் விளையாட போதிய வாய்ப்பு தராமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். நடந்து முடிந்த  லீக் ஆட்டங்களிலும் ஸ்டெய்னுக்கு வாய்ப்பு வழங்கபடவில்லை. 
 
இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறுகையில், அணியில் உள்ள மற்றொரு வீரரான ட்ரென்ட் போல்ட்யையும் கருத்தில் கொள்ள வேண்டும். தற்போதைய சூழலில் போல்டின் பந்துவீச்சு இந்தியா பிட்சுகளுக்கு சாதகமாக உள்ளது. மேலும் உலகக் கோப்பையிலும் தொடர்ந்து போல்ட் அசத்தியதால் அவரது ஃபார்மை பயன்படுத்த உள்ளோம். அணியின் மாற்றத்துக்கு ஏற்ப ஸ்டெய்னை பயன்படுத்து கொள்வோம் என வார்னர் கூறியுள்ளார்.