வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 22 ஏப்ரல் 2015 (10:15 IST)

ஐ.பி.எல்: 100 விக்கெட்டுகள் வீழ்த்தி பியூஸ் சாவ்லா அசத்தல் சாதனை

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சார்பாக பங்கேற்று வரும் சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லா, 100 விக்கெட்டுகள் சாய்த்து அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
 

 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான பியூஸ் சாவ்லா 4 ஓவர்கள் பந்துவீசி 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.
 
இதன்மூலம் பியூஸ் சாவ்லா ஐ.பி.எல். தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 4 ஆவது வீரர் என்ற புதிய சிறப்பை பெற்றார். மேலும் இதுகுறித்து பியூஸ் சாவ்லா கூறுகையில், பொதுவாக சுழற்பந்தில் பேட்ஸ்பேன்கள் அனைவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த விரும்புவர். எனவே இதுபோன்ற சூழலில் விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.