வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Updated : செவ்வாய், 5 மே 2015 (13:20 IST)

ஐ.பி.எல்: லீடிங் விக்கெட் டேக்கர் இடத்தில் ஆசிஷ் நெக்ரா முதலிடம்

ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சென்னை வீரர் ஆசிஷ் நெக்ரா முதலிடத்தை பிடித்துள்ளார்.
 
8 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக அரங்கேறிகொண்டு வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை வீரர் ஆசிஷ் நெக்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இதன்மூலம் நடப்பு தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஆசிஷ் நெக்ரா முதலிடத்தை பிடித்துள்ளார். இதுவரை ஆசிஷ் நெக்ரா 17 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2 ஆம் இடத்திலும் சென்னை வீரரான பிராவோவே இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 16 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.