வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: திங்கள், 25 மே 2015 (09:24 IST)

ஐபிஎல்: சென்னையை வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை வென்றது மும்பை இந்தியன்ஸ்

8 ஆவது ஐபிஎல் போட்டியின் சாம்பியன் மகுடத்தை 2 ஆவது முறையாக கைப்பற்றியது மும்மை அணி.
 
8 ஆவது ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் முதலில்  டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மும்மை வீரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். மும்பை அணி தொடக்கத்தில் முதல் விக்கெட்டை இழந்தாலும் பின்னர் வந்த வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். எனினும் ரோகித் சர்மா 50 ரன்னில் அவுட் ஆனார். 
பின்னர் அடுத்த பந்தில் சைமன்சும் 68 ரன்னில் வெளியேறினார். பின் வந்த பொல்லார்டு 36 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ராயுடு சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 202 ரன்களை சேகரித்தது.
 
இதைத்தொடர்ந்து இமாலய இலக்கை நோக்கி ஆடியது சென்னை அணி. இதில் ஹசி தொடக்கத்திலேயே சொர்ப்ப  ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் இணைந்த ரெய்னா - ஸ்மித் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தியது. தொடர்ந்து ஆடிய ஸ்மித் அரை சதத்தை கடந்தார். எனினும் ஸ்மித் 57 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆகி ஆட்டமிழந்தார். 
 
மறுமுனையில் புதுமாப்பிள்ளை ரெய்னாவும் 28 ரன்னில் நடையை கட்டினார். பின்னர் வந்த வீரர்கள் பெரிதாக பிரகாசிக்காததால் சென்னை வீரர்களால் வெறும் 161 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் மும்பை அணி 41 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி சாம்பியன் மகுடத்தை வென்றது.