வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (13:42 IST)

ஐபிஎல் கிரிக்கெட்: 20 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய 27 ஆவது லீக் ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் ஹைதராபாத் வெற்றியடைந்தது.


 

 
ஐபிஎல் கிரிக்கெட்டின் 27 ஆவது லீக் ஆட்டம் சண்டிகரிலுள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
 
இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
 
இதைத் தொடர்ந்து, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் வார்னர் (58), ஹென்ரிக்ஸ் (30), ஓஜா (28) ரன்கள் குவித்தனர்.
 
இதனால் 20 ஓவர்களின் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ஜான்சன் மற்றும் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
 
இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் சாகா (42) பெய்லி (22) ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.