வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2016 (12:24 IST)

ஐபிஎல்: ரசிகர்களை ஏமாற்றிய சிக்ஸர் மன்னன்

ஐபிஎல் 2 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். இந்த போட்டியில் சிக்ஸர் மன்னன் என்று போற்றப்படும் கார்லோஸ் பிரத்வெயிட் ரசிகர்ளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் சொர்ப்ப ரன்னில் வெறியேறினார்.


 

 
ஞாயிற்றுக்கிழமைகொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 2 ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
 
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் மயங்க் அகர்வால் முதல் பந்திலேயே 4 ரன் எடுத்தார்.
 
உமேஷ் யாதவ் வீசிய 2 ஆவது ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸரை அடித்தார்.
 
இந்நிலையில், 5 ஆவது ஓவரில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி அணி.
 
உலகக் கோப்பை சிக்ஸர் மன்னன் என்று கூறப்படும் கார்லோஸ் பிரத்வெயிட் களமிறங்கினார். அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிகர்களின் ஆரவாரத்தைப் பெற்றார்.
 
இதனால் அவர் நிலைத்து நின்று ரன் கணக்கை அதிகரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.
 
இதைத் தொடர்ந்து, கிறிஸ் மோரிஸ் 11, சஞ்ஜு சாம்சன் 15, அமித் மிஸ்ரா 3, ஜாகீர்கான் 4 ரன்களில் ஆட்டமிழக்க, 17.4 ஓவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி.
 
இந்நிலையில், 99 ரன் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ராபின் உத்தப்பா - கௌதம் கம்பீர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவர்களில் 69 ரன்கள் எடுத்து.
 
33 பந்துகளைச் சந்தித்த ராபின் உத்தப்பா 7 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
 
பின்னர், கம்பீருடன் இணைந்தார் மணீஷ் பாண்டே. இந்த இணை சிறப்பாக ஆடி, 14.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 99 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது.
 
கம்பீர் 41 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 38, மணீஷ் பாண்டே 12 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்கள் ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.