1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 16 பிப்ரவரி 2015 (17:46 IST)

ஐபிஎல்: யுவராஜ் சிங் ரூ.16கோடி, ஜாகிர் கான் 4 கோடிக்கு வாங்கியது டெல்லி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங்கை 16 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. ஜாகிர் கானை 4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
 
8ஆவது ஐபிஎல் போட்டிகள் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி மே 24ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்று வருகிறது.
 
இதுவரை முக்கிய வீரர்கள், எந்தெந்த அணிக்காக வாங்கப்பட்டனர் என்பதன் விவரம் பின்வருமாறு:
 
சென்னை சூப்பர் கிங்ஸ்:
மைக் ஹஸ்ஸி - ரூ.1.5 கோடி
இர்பான் பதான் - ரூ.1.5 கோடி
ராகுல் சர்மா - ரூ. 30 லட்சம்
கைல் அபோட் - ரூ.30 லட்சம்
 
டெல்லி டேர் டெவில்ஸ்:
யுவராஜ் சிங் - ரூ.16 கோடி
ஜாகீர்கான் - ரூ.4 கோடி
ஆஞ்சேலோ மேத்யூஸ் - ரூ.7.5 கோடி
ஜெய்தேவ் உனட்கட் - ரூ.1.1 கோடி
அமித் மிஸ்ரா - ரூ.3.5 கோடி
சி.எம்.கவுதம் - ரூ.20 லட்சம்
 
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
முரளி விஜய் - ரூ.3 கோடி
 
மும்பை இந்தியன்ஸ்:
ஆரோன் ஃபின்ச் - ரூ.3.2 கோடி
மிட்ச் மெக்லினாகன் - ரூ. 30 லட்சம்
 
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ஜேம்ஸ் நீஷம் - ரூ.50 லட்சம்
கே.சி. கரியப்பா - ரூ.2.40 கோடி
பிராட் ஹாக் (ஆஸி.) - ரூ.50 லட்சம் 
 
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்:
கேன் வில்லியம்சன் - ரூ.60 லட்சம்
கெவின் பீட்டர்சன் - ரூ.2 கோடி
இயன் மோர்கன் - ரூ.1.5 கோடி
ரவி பொபாரா - ரூ. 1கோடி
பிரவீண் குமார் - ரூ.2.2 கோடி
டிரெண்ட் போல்ட் - ரூ.3.8 கோடி
 
பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ்:
தினேஷ் கார்த்திக் - ரூ.10.5 கோடி
டேவிட் வீஸ் (தெ.ஆ) - ரூ. 2.8 கோடி
சான் அபோட் - ரூ.1 கோடி
ஆடம் மிலன் (நியூசி.) - ரூ. 70 லட்சம்
பிராக்யன் ஓஜா - ரூ.50 லட்சம்
எஸ்.பத்ரிநாத் - ரூ.30 லட்சம்