வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (14:39 IST)

ஐ.பி.எல்: மும்பை அணியை குறைத்து மதிப்பிட முடியாது: பிளமிங்

தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் மும்மை இந்தியன்ஸ் அணியை குறைத்து மதிப்பிட முடியாது என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கருத்து தெரிவித்துள்ளார். 
 

 
8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் இன்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன. தொடர் வெற்றிகளால் சென்னை அணி எவ்வித நெருக்கடியின்றி காணப்படுகிறது. எனினும் மும்மை அணி இத்தொடரில் இன்னும் வெற்றி கணக்கை தொடங்கவில்லை.
 
இந்நிலையில் போட்டி குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் கூறுகையில், இன்றைய போட்டியில் மும்மை அணி சொந்த மண்ணில் பங்கேற்கிறது. எனவே கடந்த போட்டிகளை காட்டிலும் இப்போட்டி முற்றிலும் மாறுப்பட்டது. மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்தாலும் அவ்வணியை குறைத்து மதிப்பிட முடியாது. கோப்பையை வெல்ல ஒவ்வொரு ஆட்டத்திலும் சிறப்பாக பங்காற்றுவோம் என்றார்.