வெள்ளி, 29 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 15 ஏப்ரல் 2015 (09:04 IST)

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி

நேற்று நடைபெற்ற லிக் ஆட்டத்தில் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

 
ஐ.பி.எல். போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 
 
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். இதில் திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக பின்ச் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். மும்பை அணியில் பார்திவ் படேல் மற்றும் உன்மூகத் சந்த் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
 
பின்னர் இணைந்த போலார்ட் - ஆண்டர்சன் ஜோடி அதிரடி ஆட்டத்தை தொடங்கியது. சிறப்பாக விளையாடிய போலார்ட் 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அசத்தினார். மறுமுனையில் ஆண்டர்சனும் 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது.
 
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான ரகானே-சாம்ஸனும் ஆட்டத்தை தொடங்கினர். இதில் சாம்சன் 17 ரன்களில் வெளியேறினார். பின்னர் இணைந்த ரகானேவுடன் சுமித்தும் பொறுப்புடன் சேர்ந்து விளையாடினர். 
 
எனினும் ரகானே 46 ரன்களில் அவுட் ஆனார். மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட தீபக் ஹூடா வந்த வேகத்தில் நடையை கட்டினார். மறுமுனையில் ஸ்மித் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி பந்துகளை சிக்சர்களுக்கு பறக்கவிட்டு கொண்டிருந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 5 பந்துகள் மீதம் உள்ள நிலையில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.  ஆட்டநாயகன் விருதை ஸ்மித் தட்டி சென்றார்.