1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Mahalakshmi
Last Updated : சனி, 18 ஏப்ரல் 2015 (10:27 IST)

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சுமித், மெக்கல்லம் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிதாக வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
 
8 ஆவது ஐ.பி.எல் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இதில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கினர். தொடக்கத்திலேயே பார்த்தீவ் பட்டேல் டக் அவுட் ஆனார். மறுமுனையில் சிம்மன்சும் 5 ரன்களிளும், ஆண்டர்சனும் 4 ரன்களிளும் ஆட்டமிழந்தனர். பின்னர் இணைந்த ரோகித் சர்மா, ஹர்பஜன் சிங் ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ஹர்பஜன் 24 ரன்களில் வெளியேறினார்.
 
பின்னர் ரோகித் சர்மா, போலார்ட் ஆகியோர் விஸ்வரூபம் எடுக்க களத்தில் ரன் வேட்டை தொடங்கியது.  திறமையாக செயல்பட்ட ரோகித் சர்மா அரை சதத்தை எட்டி வெளியேறினார்.
மறுமுனையில் போலார்ட், ராயுடு இணைந்து சென்னை பந்துவீச்சை சிதறடித்து வந்தனர். எனினும் போலார்ட் 64, ராயுடு 29 ரன்கள் எடுத்து வெளியேறினர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர்கள் சுமித் மற்றும் மெக்கல்லம் சேர்ந்து மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதில் மெக்கல்லம் 46 ரன்கள், சுமித் 62 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின் வந்த புதுமாப்பிள்ளை ரெய்னா தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். 
 
இறுதியில் சென்னை அணி 16.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற ரெய்னா 46 ரன்களை சேகரித்தார். ஆட்டநாயகன் விருதை நெய்ரா தட்டி சென்றார்.