வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By Suresh
Last Updated : திங்கள், 27 ஏப்ரல் 2015 (08:31 IST)

ஐபிஎல்: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 26 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றது.


 

 
டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த 26 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதின.
 
டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் விராட் கோலி டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை ஆரம்பித்த டெல்லி அணி, பெங்களூரு அணியின் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திவித்தது.
 
மயங்க் அகர்வால் (27 ரன்), கேப்டன் டுமினி (13 ரன்), கேதர் ஜாதவ் (33 ரன்) ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். யுவராஜ்சிங் 2 ரன் மட்டுமே எடுத்தார்.
 
இந்த ஆட்டத்தின் முடிவில், டெல்லி அணி 18.2 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த சீசனில் ஒரு அணியின் மிகக் குறைவான  ஸ்கோர் இதுதான். ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், வருண் ஆரோன், டேவிட் வைஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
 
இதைத் தொடர்ந்து, குறைவான இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் இறங்கினர்.
 
பெங்களூரு அணி 10.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 99 ரன்கள் எடுத்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது.
 
கெய்ல் 62 ரன்களுடனும் (40 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்), விராட் கோலி 35 ரன்களுடனும் (23 பந்து, 6 பவுண்டரி) களத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.