வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 21 மே 2015 (16:40 IST)

மன்தீப் சிங்குக்கு தனது ஆட்டநாயகன் விருதை வழங்கிய டி வில்லியர்ஸ்

தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை டி வில்லியர்ஸ் மன்தீப் சிங்குக்கு வழங்கி கவுரவித்தார்.
 
புனேவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டித் தொடரின் வெளியேறுதல் சுற்று (எலிமினேட்டர்) போட்டியில் பெங்களூர் அணி 71 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தோற்கடித்தது.
 

 
முன்னதாக பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தபோது 7.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 46 ரன் என்ற நிலையில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த டிவில்லியர்ஸ் – மன்தீப்சிங் இணை அதிரடியாக விளையாடி 113 ரன் சேர்த்தனர். இதனால் பெங்களூர் அணி 180 ரன்கள் குவித்தது. 
 
இந்த போட்டிக்கு ஆட்ட நாயகன் விருது 66 ரன்கள் (38 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) குவித்த டி வில்லியர்ஸுக்கு வழங்கப்பட்டது. ஆனால் டி வில்லியர்ஸ் அந்த விருதை 54 ரன்கள் (34 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) குவித்த மன்தீப் சிங்குக்கு வழங்கினார்.
 
நீங்கள் இந்த கிரகத்திலிருந்துதான் வந்தீர்களா? எப்படி ஒரு மனிதனால் நம்ப முடியாத பல திறைமைகளை கொண்டிருக்கும் பாக்கியம் கிடைத்தது என்ற கேள்விக்கு, “உங்கள் அன்புக்கு மிகவும் நன்றி.
 
மிகவும் நேர்மையாக சொல்லவேண்டுமானால் நான் இன்றைய போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடவில்லை. மன்தீப் விளையாடியதை விதத்திற்கா, நான் அவருக்கு அனைத்து நன்றிகளையும் வழங்குகிறேன்” என்று தெரிவித்தார்.
 
இதுகுறித்து மன்தீப் சிங் கூறுகையில், ” டி வில்லியர்ஸ் மிகப்பெரிய கிரிக்கெட் வீரர். ஆனால் அதைவிட அவர் மிகவும் பெரிய மனிதர்” என்றார்.