சொதப்பிய சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள்: 46 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!

Last Modified சனி, 27 ஏப்ரல் 2019 (07:05 IST)
156 என்ற எளிய இலக்கை எட்ட முடியாமல் சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ஒட்டுமொத்தமாக சொத்ப்பியதால் அந்த அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் சென்னை ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
நேற்றைய 44வது ஐபிஎல் லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, கேப்டன் ரோஹித்சர்மாவின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்தது.

156 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியை அடுத்து மும்பை அணி 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பெற்றது. சிஎஸ்கே அணி முதலிடத்தில் இருந்தாலும் குறைவான ரன்ரேட்டை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஸ்கோர் விபரம்:

மும்பை அணி: 155/4
20 ஓவர்கள்

ரோஹித் சர்மா: 67
லீவிஸ்: 32
ஹர்திக் பாண்ட்யா: 23

சிஎஸ்கே அணி: 109/10
17.4 ஓவர்கள்

முரளிவிஜய்: 38
சாண்ட்னர்: 22
பிராவோ: 20
ஆட்டநாயகன்: ரோஹித் சர்மா

இன்றைய போட்டி: ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத்


இதில் மேலும் படிக்கவும் :