டாஸ் வென்ற தல தோனி: கொல்கத்தாவை வீழ்த்துமா சென்னை?

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:31 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான போட்டியான இன்று சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் தோனியா? ரஸல்லா? என்ற டிரெண்ட் ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் யாருக்கு வெற்றி? என்பதை அறிய ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்த நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற தல தோனி, சற்றும் யோசிக்காமல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது

இன்றைய ஆடும் 11 பேர் கொண்ட கொல்கத்தா அணியில் சுனில் நரேன், கிரிஸ் லின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ரானா, கில், தினேஷ் கார்த்திக், ரஸல், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ், ஹாரி கர்னெ, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் சென்னை அணியில் டீபிளஸ்சிஸ், வாட்சன், சுரேஷ் ரெய்னா, ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா, குகிலின், தீபக் சஹார், ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் உள்ளனர்

இரு அணிகளும் ஐந்து போட்டிகள் விளையாடி நான்கில் வெற்றி பெற்று 8 புள்ளிகள் பெற்றுள்ளதால் இன்று வெற்றி பெறும் அணி முதலிடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :