'தல' மேட்ச்சை பார்க்க வந்த தனுஷ்!

Last Updated: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (21:11 IST)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால், கொல்கத்தா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. சிஎஸ்கே பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி 13 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 63 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த போட்டியை காண கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் வருகை தந்துள்ளார். அதேபோல் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் சிலரும் சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். தனது மகனுடன் தனுஷ் வந்துள்ளார் என்பதும் தனுஷின் மகன் சிஎஸ்கே அணியின் கலரான மஞ்சள் உடையில் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் சென்னை வெல்ல வேண்டும் என்று பெருபாலான சினிமா நட்சத்திரங்கள் டுவீட்டுக்களை பதிவு செய்து வரும் நிலையில் போட்டியை நேரில் பார்க்க தனுஷ் வந்துள்ளார். தனுஷை அவரது ரசிகர்கள் மைதானத்தில் வரவேற்றனர்.இதில் மேலும் படிக்கவும் :