1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 31 மார்ச் 2017 (23:27 IST)

விராத் கோஹ்லி, அஸ்வின், முரளி விஜய் மிஸ்ஸிங். களை இழக்கின்றதா ஐபிஎல்

கிரிக்கெட் திருவிழாக்களில் முக்கியமான போட்டித்தொடராக கருதப்படும் 'ஐபிஎல்' போட்டிகள் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி தொடரில் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தொடர் முழுவதும் விலகுவதாக அறிவித்துள்ளதால் போட்டிகள் களையிழக்கின்றதா? என்ற ஐயம் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.



 


இந்தியாவின் முக்கிய வீரர்களான விராத் கோஹ்லி, ரவிசந்திரன் அஸ்வின், முரளி விஜய், கே.எல்.ராகுல்  ஆகியோர் காயம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீகில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டனாக உள்ள விராத் கோஹ்லி காயம் காரணமாக ஒருசில போட்டிகளில் இருந்து விலகியுள்ளதால் அவருக்கு பதில் ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகிப்பார் என தெரிகிறது.

அதேபோல் ரவிசந்திரன் அஸ்வின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் முரளி விஜய் கின்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் விளையாடவுள்ள நிலையில் இரு வீரர்களும் ஐபிஎல் 10 வது சீசன் முழுவதும் காயம் காரணமாக போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என தெரிகிறது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.