Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோவிலில் கிடைக்கும் புளியோதரை போல் செய்ய வேண்டுமா...?

Widgets Magazine

தேவையான பொருட்கள்:
 
பச்சரிசி - 2 டம்ளர் 
புளி - 100 கிராம் 
வெந்தயம் - 1/2 டீஸ்பூன் 
மிளகு -1 டீஸ்பூன் 
தனியா - 2 டீஸ்பூன் 
காய்ந்தமிளகாய் - 10 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் 
மஞ்சள்தூள் - சிறிது 
உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - 2 டீஸ்பூன் 
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் 
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன் 
கறிவேப்பிலை, பெருங்காயம் - தேவைக்கேற்ப
நல்லெண்ணெய் - 1 கப் 
வெல்லம் - 1 கட்டி

 
செய்முறை:
 
பச்சரிசியை வேகவைத்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும். இதில் சிறிது மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து  பிசறி, தட்டில் ஆற விடவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும். 
 
வெறும் கடாயில் தனியா, கடலைப்பருப்பு, மிளகு, வெந்தயம், காய்ந்தமிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பொடித்து  வைக்கவும். 
 
கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை,  பெருங்காயத்தூள் தாளித்து, புளிக்கரைசல், உப்பு, வெல்லம் போட்டு நன்றாக கொதிக்க விட்டு கெட்டியானதும் இறக்கி, சாதத்தையும், அரைத்த பொடியையும் சேர்த்து கிளறி வைக்கவும். நன்கு ஊறினால் சுவை கூடுதலாகும்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

முட்டைகோஸ்-பசலைக் கீரை ஸ்டப்டு சப்பாத்தி செய்ய....

முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல், வெங்காயத் துருவல், பசலைக் கீரை ஆகியவற்றுடன் உப்பு ...

news

இளநீர் பாயசம் செய்ய...

இளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, ...

news

அனைவரும் விரும்பும் சுவைமிக்க இறால் பிரியாணி செய்ய வேண்டுமா...?

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். அடிகனமாக பாத்திரத்தை ...

news

பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய...!

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் மிளகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து ...

Widgets Magazine Widgets Magazine