வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இந்திய வகைகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 18 மார்ச் 2015 (15:03 IST)

சு‌‌‌ண்டைக்கா‌ய் வ‌ற்ற‌ல்

தேவையான பொருட்க‌ள்
 
சுண்டைக்காய் - 1/2 கிலோ, 
மோ‌ர் - 2 லிட்டர், 
உப்பு - தேவைகேற்ப 
 
செய்முறை
 
முதலில் சுண்டைக்காயை க‌த்‌தி‌யி‌ல் கொ‌ஞ்சமாக வெ‌ட்டி, விதை போக அலசவும். பின்னர் கொதிக்கும் நீரில் போட்டு மூடி, 5 நிமிடம் கழித்து, நீரை வடித்து வைக்கவும். 
 
மோரில் உப்பை கலந்து சு‌ண்டை‌க்காயை மோரில் போட்டு ஊற வைக்கவும். அடுத்த நாள் மோரிலிருந்து காயை கரண்டியால் அரித்தெடுத்து வெயிலில் காய வைக்கவும். மோரையும் தனியே வெயிலில் வைக்கவும். 
 
மாலையில் திரும்ப காயை மோருக்குள் போட்டு கலக்கி மூடி வைக்கவும். மோர் வற்றும் வரை திரும்ப‌த் திரும்ப இதே போல் (4, 5, 6வது வரிகள் சொன்னது போல்) செய்யவும். (3 அல்லது 4 நாட்களில் மோர் முழுவதும் வற்றி விடும்). 
 
வற்றல் நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.