Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இனி பட்டர் நாண் சாப்பிட ஹோட்டலுக்கு போக தேவையில்லை...

இனி பட்டர் நாண் சாப்பிட ஹோட்டலுக்கு போக தேவையில்லை...

Widgets Magazine

வட இந்தியர்களின் உணவு வகை நாண். நாண் என்பதும் சப்பாத்தி வகையை சேர்ந்த உணவு. உங்களுக்கு நாண் பிடிக்கும் எனில் அதனை வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.

 
தேவையான பொருட்கள்:
 
மைதா மாவு - 2 கப்
ட்ரை ஈஸ்ட் - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2/3 கப்
 
செய்முறை:
 
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, வெதுவெதுப்பாக சூடேற்றி, அதில் ட்ரை ஈஸ்ட் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்து வைக்க வேண்டும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, தயிர், பாதி வெண்ணெய் சேர்த்து கலந்து, ஈஸ்ட் மற்றும் சர்க்கரை கலந்த நீரை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் பிசைய வேண்டும். 
 
2. பிறகு அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.  பிறகு பார்த்தால், மாவு நன்கு உப்பியிருக்கும். அதனை மீண்டும் அதனை ஒரு முறை பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திப் போன்று தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அடுப்பை பற்ற வைத்து, தீயை குறைவில் வைத்து, அதன் மேல் தேய்த்து வைத்துள்ளதை மாவை வைக்க வேண்டும். 
 
3. நாணானது நன்கு உப்பி மேலே வரும் போது, அதன் மேல் வெண்ணெயை தடவி, மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும். இதோ சுவையான பட்டர் நாண் தயாராகிவிட்டது. அதன் மீது சிறிது வெண்ணெயை தடவி பரிமாறலாம்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

இனி கேரட்டில் செய்திடலாம் சட்னி - சுவையான கேரட் சட்னி

ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? கவலை வேண்டாம். இனி செய்திடலாம் சத்தான, சுவை ...

news

ஜீரண சுரப்பிகளின் செயலை அதிகரிக்க செய்யும் இஞ்சி துவையல்

இஞ்சியைத் தோல்சீவி நன்றாகக் கழுவி சிறுதுண்டுகளாக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியில் ...

news

வயிற்றுப் புண்களை சரிசெய்யும் மணத்தக்காளி சூப்...

மணத்தக்காளி கீரையை சுத்தம் செய்து இலையை நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயம், தக்காளி ...

news

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

பச்சரிசியை சுத்தம் செய்து மாவாக அரைக்கவும். வெல்லத்தை கரைத்து வடிகட்டி, பச்சரிசி மாவுடன் ...

Widgets Magazine Widgets Magazine