பிரட் பீட்ரூட் பால்ஸ்

பிரட் பீட்ரூட் பால்ஸ்


Sasikala|
மாலையில் எப்போதும் பஜ்ஜி, போண்டா என்று செய்து சாப்பிடாமல், உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் வகையில் ஏதாவது ஒரு காய்கறிகளைக் கொண்டு வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிடலாமே....

 
 
தேவையான பொருட்கள்:
 
பிரட் - 10 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது
பீட்ரூட் - 1 கப் துருவியது
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது
சோளமாவு - 3 டேபிள் ஸ்பூன்
 
செய்முறை:
 
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் துருவிய பீட்ரூட்டை சேர்த்து, உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின்னர் அதில் மிளகாய்த் தூள், கரம் மாசாலா சேர்த்து நன்கு கிளறி, பின் மசித்த உருளைக்கிழங்கையும், சேர்த்து புரட்டி இறக்கி, குளிர வைத்து, அக்கலவையை சிறுசிறு உருண்டைகளாகப் பிரித்து தனியாக வைத்துக் கொள்ளவும். 
 
பின்பு பிரட் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதனை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். பிறகு அந்த பிரட் கலவையை, எத்தனை பீட்ரூட் உருண்டைகள் உள்ளதோ, அந்த அளவில் சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
 
பின் பிரட் உருண்டையை எடுத்து, தட்டையாக தட்டி, அதன் நடுவே பீட்ரூட் உருண்டையை வைத்து மூட வேண்டும். இப்படி அனைத்தையும் செய்ய வேண்டும். அடுத்து அந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து சோளமாவில் பிரட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
 
இறுதியில் ஒரு அகன்ற வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த உருண்டைகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், பிரட் பீட்ரூட் பால்ஸ் ரெடி.


இதில் மேலும் படிக்கவும் :