வெஜிடபிள் இஷ்டு

Webdunia|
வெஜிடபிள் இஷ்டு கேரளாவின் பாரம்பரிய உணவாகும்.கேரளாவில் பெரும்பாலும் தேங்காய் எண்ணெயை மட்டும் தான் சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.எனவே தேங்காய் எண்ணெயின் குணநலன்களோடு இருக்கும் வெஜிடபிள் இஷ்டுவை உண்டு மகிழுங்கள்.

தேவையானவை

கேரட் - 2
பீன்ஸ் - 1/2 கப்
உருளை கிழங்கு - 2
பட்டாணி - 1/2 கப்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6
கரம் மசாலா - 1 ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 2 கப்
பட்டை, கிராம்பு - சிறிது
உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி அரைவேக்காடாக வேகவைத்து எடுக்கவும்.
துருவிய தேங்காயிலிருந்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும் (3 முறை).

வாணலியில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, கிராம்பு, வெங்காயம், கறிவேப்பிலை, வேகவைத்த காய்கறிகள், பட்டாணி, ஆகியவற்றை சேர்த்து நன்கு வெந்ததும் மூன்றாவதாக எடுத்த தேங்காய் பால், இரண்டாவதாக எடுத்த தேங்காய் பால் ஊற்றி மிதமான தணலில் வேகவைக்கவும்.
இந்த கலவையில் உப்பு சேர்த்து அடுப்பை அனைத்து முதலில் எடுத்த தேங்காய் பாலை சேர்க்கவும்.மறுபடியும் மிதமான தணலில் வைத்து கரம் மசாலா சேர்த்து இறக்கி சூடாக பரிமாறவும்.


இதில் மேலும் படிக்கவும் :