வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்புக‌ள்
  3. சுத‌ந்‌திர ‌தின‌ம்
Written By Geetha Priya
Last Updated : வியாழன், 14 ஆகஸ்ட் 2014 (21:27 IST)

மென்மையான போக்கு இல்லை- மகாத்மா காந்தி

விரைவாகவோ, தாமதமாகவோ அல்லது ஒருபோதும் நீங்காததாகவோ காணப்படும் ஆபத்தான நிலைகளை எதிர்கொள்வதில் மென்மையான போக்கை கையாளக்கூடாது. எனது முந்தைய 
உண்ணாவிரதங்களை பலவந்தமானது என்று விமர்சகர்கள் கூறலாம்; எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தீர்ப்பை அவர்கள் பாராட்டலாம். ஆனால், உண்ணாவிரதங்களின் நெருக்கடியாலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நோக்கம் ஆழமாக நடவடிக்கையினால் வலிமையாக எடுத்துரைக்கப்படும்போது அதற்கு எதிரான தீர்ப்பிற்கு என்ன மதிப்பிருக்க முடியும்? 
கடமையைப் போன்ற தூய உண்ணாவிரதமானது, அதற்குரிய வெகுமதியே. ஒரு தீர்வு கிடைக்கும் என்பதற்காக, இதில் ஈடுபடவில்லை. இது செய்யப்பட வேண்டியது என்பதற்காகவே செய்கிறேன். ஆகவே, இப்போராட்டத்தின் நோக்கத்தை விருப்பு வெறுப்பின்றி பரிசீலிக்குமாறுஅனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். நான் இறந்துதான ஆகவேண்டுமெனில், என்னை அமைதியான சூழலில் இறக்க விடுவீர்கள் என்ற நம்பிக்கை உறுதியாகவுள்ளது. இந்தியா, இந்துத்துவம், சீக்கியம், இஸ்லாம் ஆகியவை அழிந்த நிலையில், அப்போது இயலாதவொரு சாட்சியாக இருப்பதைவிட, மகிழ்ச்சியுடன் விடுதலை பெறும் வழியாக எனது மரணம் இருக்கட்டும். உலகின் பல்வேறு நியதிகளுக்கும் உட்பட்டு, பாகிஸ்தானில் சமத்துவ நிலை, உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு ஆகியவை உறுதிபடுத்தப்படவில்லை என்றால், அவை இந்தியாவாலும் பின்பற்றப்பட்டால், மேற்குறிப்பிட்ட அழிவு உறுதி. அதன்பிறகு, உலகின் வேறெங்கும் இல்லாமல், இரண்டு இந்தியாவிலேதான் இஸ்லாம் மறையும். ஆனால் இந்தியாவுக்கு வெளியே இந்துத்துவமும், சீக்கியமும் இருக்காது. 
 
என்னுடன் வேறுபட்டு இருப்பவர்கள், அவர்களது தடை இரக்கமற்றதாக இருப்பதற்காக என்னால் கெளரவப்படுத்தப்படுவர். எனது உண்ணாவிரதத்தால் மனசாட்சியை துரிதப்படுத்தட்டும்; அது சக்தி இழந்திட அனுமதிக்காதீர். நாம் நேசிக்கும் இந்தியாவிற்கு ஏற்பட்டுவரும் அழிவை கொஞ்சம் எண்ணிப்பார்த்து, இந்தியத் தாயின் வலிமையும், தூய்மையும் மிகுந்த ஒரு புதல்வன் அதை தடுக்கும் நடவடிக்கையில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதை நினைத்துப் பாருங்கள். அவ்வாறு அவன் இல்லையெனில், பூமிக்கு அவன் பாரமாவான். இந்தியாவின் பாரமான சூழலைப் போக்கிவிட்டு, அதை அவனால் இயன்றவரை விரைவில் களையச் செய்வான்.
 
பிர்லா இல்லத்துக்கு விரைந்து, என்னை பலவீனப்படுத்த முயலுவதோ அல்லது எனக்காக கவலையுறவோ வேண்டாம் என்று எல்லா நண்பர்களையும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். நான் கடவுளின் கரங்களில் இருக்கிறேன். நம் அனைவரின் இந்த சோதனையான நேரத்துக்காக, அவர்கள் இல்லங்களில் தேடல் விளக்குகளுக்கு சற்றே ஒளியூட்ட வேண்டும். தங்கள் கடமையில் பொறுப்பு வகிப்பவர்கள், அதில் சிறப்புடனும் மகிழ்ச்சியுடனும் செயலாற்றி, இப்போதைய நிலையை விட மேலாக எனக்கு உதவி செய்து, எல்லா வழிகளிலும் காரணமாக வேண்டும். உண்ணாவிரதம் என்பது அகத்தை தூய்மைப்படுத்தும் செயல்பாடேயாகும்.
 
ஹரிஜன், 18.01.1948